×

‘மோர்’ சூப்பர் மார்க்கெட்டில் ஹேர் டைக்கு ரூ.10 கூடுதல் வசூல் ரூ.30,000 அபராதம் விதித்தது கோர்ட்

சிவகங்கை: ஹேர் டை ஷாம்பு பாக்கெட்டிற்கு கூடுதலாக ரூ.10 வசூலித்த சென்னை ‘மோர்’ சூப்பர் மார்க்கெட்டுக்கு ரூ.30,010 அபராதம் விதித்து சிவகங்கை நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டது. சிவகங்கை அருகே அழகு நாச்சியபுரத்தைச் சேர்ந்தவர் துரைப்பாண்டி. இவர் கடந்த ஆண்டு அக்.5ம் தேதி சென்னை தியாகராய நகரில் உள்ள ‘மோர்’ சூப்பர் மார்க்கெட்டில் ஹேர் டை ஷாம்பு வாங்கியுள்ளார். அதன் விலை ரூ.29 என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் அந்த கடையில் அதைவிட கூடுதலாக ரூ.10 சேர்த்து ரூ.39 வாங்கியுள்ளனர். இதுகுறித்து துரைப்பாண்டி நிறுவனத்திடம் கேட்டபோது அவர்கள் உரிய முறையில் பதில் அளிக்கவில்லை. இதையடுத்து துரைப்பாண்டி, சிவகங்கை நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நுகர்வோர் நீதிமன்ற தலைவர் பாலசுப்ரமணியம், உறுப்பினர் குட்வின் சாலமன்ராஜ் ஆகியோர், சேவை குறைபாட்டிற்காக சூப்பர் மார்க்கெட் நிறுவனத்திற்கு ரூ.25 ஆயிரம், வழக்கு செலவிற்கு ரூ.5 ஆயிரம், துரைப்பாண்டியிடம் கூடுதலாக வசூலித்த ரூ.10 சேர்த்து ரூ.30,010ஐ அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளனர்.

The post ‘மோர்’ சூப்பர் மார்க்கெட்டில் ஹேர் டைக்கு ரூ.10 கூடுதல் வசூல் ரூ.30,000 அபராதம் விதித்தது கோர்ட் appeared first on Dinakaran.

Tags : Mor ,Sivagangai ,Chennai ,'More ,Dinakaran ,
× RELATED நீர் மோர் பந்தல் திறப்பு